உலகில் பல உயரமான கட்டிடங்கள் உள்ள நிலையில் அவற்றில் ஏறுவதை பலர் சாகசமாக செய்து வருகின்றனர். ஸ்கை ஸ்க்ரேப்பர் எனப்படும் இவ்வாறான உயர்ந்த கட்டிடங்களில் ஏறவும், நடுவே கயிறு போட்டு நடக்கவும் முறையான அனுமதி பெறுவதுடன், நிறைய பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
சமீபத்தில் தென்கொரியா சென்ற பிரிட்டிஷ் நபர் ஒருவர் திடீரென இந்த கட்டிடத்தின் சுவர்களில் வேகமாக ஏறத் தொடங்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லியுள்ளனர். காவல்துறையினர் எச்சரித்தும் அவர் பொருட்படுத்தாமல் ஏற தொடங்கியுள்ளார். பாதுகாப்பிற்கு கயிறு உள்ளிட்ட எந்த சாதனமும் இல்லாமல் வெறும் கைகளால் அவர் தொடர்ந்து கட்டிடத்தில் ஏறியது பலரையும் பதற்றத்தில் ஆழ்த்தியது.
வேகவேகமாக ஏறி 73வது தளத்தில் சென்று கொண்டிருந்த அந்த நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பிரிட்டனை சேர்ந்த 23 வயதான ஜார்ஜ் கிங் தாம்சன் என தெரியவந்துள்ளது. வெறும் கைகளால் சிலந்தி மனிதன் போல கட்டிடத்தில் ஏறி தாம்சன் அதிர்ச்சியை ஏற்படுத்துவது இது முதல்முறை இல்லையாம். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு லண்டனில் உள்ள ஷார்ட் கட்டிடத்தில் இப்படி வெறும் கைகளால் ஏறி கைதானவர்தான் தாம்சன் என தெரிய வந்துள்ளது.