பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் தலைநகர் குவட்டாவில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டபோது, திடீரென பயங்கரமான குண்டு வெடித்தது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததாகவும் மாகாண உள்துறை அமைச்சர் ஜியா லாங்கோவ் தெரிவித்துள்ளார். இதனிடையே ”இந்த தற்கொலை குண்டு சம்பவத்திற்கு நாங்கள் தான் பொறுப்பு”என ஐ.எஸ்,. பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. கடந்த வாரத்தில் குவாட்டாவில் நடந்த இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.