73 வயது பிரிட்டன்வாசியை மணந்து கொண்ட அழகிய ஆசிய பெண்! காதலில் விழுந்தது எப்படி தெரியுமா?

திங்கள், 14 ஜனவரி 2019 (07:28 IST)
பிரிட்டனைச் சேர்ந்த 73 வயது துணை மேயரை பிலிப்பைன்ஸை சேர்ந்த 30வயது அழகிய பெண் காதலித்து திருமணம் செய்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
பிரிட்டனின் Cambridgeshire பகுதியில் மார்ச் டவுனின் துணை மேயராக இருப்பவர் கிட் ஓவன் (73). இவருக்கு லிஸா மற்றும் ஜோனாதன் என 2 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மனைவி  பிவர்லி ஓவன் கடந்த 1967ம் ஆண்டு Miss Hunstanton ஆக வென்றவர். மிஸ் ஏஞ்சலியாவாக பலமுறை தகுதி பெற்றவர் ஆவார். இவர் கடந்த 2008ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார்.  
 
இந்நிலையில்  கிட் ஓவன் மனைவி இறந்த பின்னர்,
ஆசியாவின் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஆஸா (30). என்பவருடன் ஆன்லைனில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இவரும் நட்புடன் பழகிய நிலையில் ஒருவருக்கு ஒருவர் செல்போன் நம்பரை பறிமாறிக்கொண்டனர். இதையடுத்து இருவரும் நேரில் பார்க்காமலேயே வாட்ஸ் அப் மூலம் காதலித்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் பிலிப்பைன்ஸ் சென்ற கிட் ஓவன் தனது காதலி ஆஸாவை சந்தித்து காதல் மழை பொழிந்தார். பின்னர் பிரிட்டனில் தங்க காதலிக்கு விசா பெற்று அழைத்துச் சென்றார் ஓவன், நேற்று முன்தினம் பிரிட்டனில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  திருமணத்தின் போது இவரும் முத்தம் பரிமாறி அன்பை வெளிப்படுத்தினர். இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் 10 பேர் மட்டுமே பங்கேற்றனர்.


 
வயதை காதல் வென்றுவிட்டதாக இங்கிலாந்து இணைதளங்கள் , இந்த திருமணத்தை புகழ்ந்து தள்ளி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்