நடுவானில் பறந்த விமானத்தில் பிறந்த குழந்தை – குவைத்தில் ஆச்சர்ய சம்பவம்

புதன், 31 ஜூலை 2019 (12:37 IST)
குவைத்தில் நடுவானில் பரந்து கொண்டிருந்த விமானத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் வைரலாகியுள்ளது. அந்த குழந்தையின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டிங்க் ஆகியுள்ளது.

அரபு நாடுகளில்
பிரபலமான மிடில் ஈஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தோஹாவிலிருந்து பெய்ரூட் நோக்கி தனது பயணத்தை தொடங்கியிருக்கிறது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக செயல்பட்ட ஊழியர்கள் விமானத்தில் உள்ள மருத்துவ பணிபெண்ணை அழைத்து வந்திருக்கின்றனர். விமானிக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் தரையிறங்க வசதிகள் இல்லாததால் விமானி குவைத்தில் தரையிறக்க திட்டமிட்டுள்ளார். அதற்குள் அந்த பெண்ணுக்கு வலி அதிகமாகவே கழிப்பறைக்குள் அழைத்து சென்று பிரசவம் பார்த்திருக்கிறார்கள்.

விமானம் தரையிறங்கும் முன்னரே அவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டவுடன் உடனடியாக தாய், சேய் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

விமானத்தில் குழந்தை பிறந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை விமான ஊழியர்கள் லேபனீஸ் ப்ளேன் ஸ்பாட்டர்ஸ் என்ற ஃபேஸ்புக்கில் பதிவு செய்தனர். அந்த புகைப்படம் உலகம் முழுக்க வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்