கவுதமாலா நாட்டின் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதில் இருந்து 10 கி.மீ தொலைவிற்கு செந்நிற, 700 டிகிரி வெப்பம் மிகுந்த லாவா வெளியேறியது.
இதனால் அங்குள்ள வீடுகள் லாவாவுக்கு இரையாகின. மேலும், இந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் லாவாவில் சிக்கிக்கொண்டனர். இதில் இருந்து மக்களை காப்பாற்ற அங்குள்ள பேரிடர் மீட்பு குழு போராடி வருகிறது. நேற்று வரை எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 69 ஆக இருந்தது. ஆனால், தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.