கரை ஒதுங்கிய 74 அகதிகளின் உடல்!!

புதன், 22 பிப்ரவரி 2017 (17:51 IST)
ஆப்பிரிக்கா நாடான லிபியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற சூழ்நிலையால் அந்த நாட்டு மக்கள் வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.


 
 
இதில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் மூலம் சென்று சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்.
 
இவ்வாறு படகில் செல்லும் போது அவ்வப்போது கடலில் மூழ்கி அவர்கள் பலியாகும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்நிலையில் லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஒரு படகில் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற போது மோசமான வானிலை காரணமாக படகு உடைந்து கடலில் கவிழ்ந்தது.
 
அந்த படகுடன், 74 பேரின் உடல்களும் கரை ஒதுங்கின. இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்