ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா: அமெரிக்கா தப்பிக்க வழியே இல்லையா?

வியாழன், 16 ஜூலை 2020 (07:11 IST)
அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அந்நாட்டு கொரோனாவில் இருந்து மீள வழியே இல்லையா? என்று அந்நாட்டினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 70,914 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அமெரிக்காவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,15,991 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் நேற்று மட்டும் 958 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 1,40,101 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் ஒரே நாளில் 39,705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பிரேசில் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,70,909 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 1,261 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 75,523 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.36 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 13,689,917 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 80.28 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.86 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் 970,169 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,929 என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்