நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி நாளில் முக்கிய மசோதா தாக்கல் செய்வதா? கனிமொழி எம்பி கண்டனம்..!

Siva

வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (09:12 IST)
முக்கிய மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாட்களில் தாக்கல் செய்வது, மத்திய அரசின் வழக்கமாகிவிட்டது என தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை மத்திய அரசு நேற்று மக்களவையில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த மசோதாக்கள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாட்களில் தாக்கல் செய்யப்பட்டதால், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவின் நகல்களை கிழித்து அமைச்சரின் அருகே வீசினர்.
 
முக்கிய மசோதாக்களை வாசிப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்குக்கூட அவகாசம் தராமல், மத்திய அரசு அவசர அவசரமாக அவற்றை அறிமுகப்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் என்று கனிமொழி குற்றம் சாட்டினார். 
 
மேலும், இது தொடர்பாக பலமுறை வேண்டுகோள் விடுத்தும், பிகாரில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் திருத்தம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்