பூமியில் ஒரு செயற்கை சொர்க்கம்: சவுதி அரேபியா அரசின் பிரமாண்டமான பிளான்

வியாழன், 13 ஏப்ரல் 2017 (22:29 IST)
சொர்க்கம் என்ற ஒன்று இருக்கின்றதா? இல்லையா?, அப்படியே இருந்தாலும் அது எப்படி இருக்கும் என்று இதுவரை யாரும் அறிந்ததில்லை. ஆனால் ஆடம்பரமாக இருக்கும் என்பது மட்டும் தெரியும். இந்த நிலையில் பூமியிலேயே தன்னால் சொர்க்கத்தை உருவாக்க முடியும் என்று வெகுவிரைவில் நிரூபிக்க உள்ளது சவுதி அரேபிய அரசு



 


சவுதி அரேபிய நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான சுற்றுலா நகரம் ஒன்று உருவாக இருக்கிறது. செயற்கை சொர்க்கம் என்று அழைக்கப்படவுள்ள இந்த சுற்றுலா நகரில் கேளிக்கைகளுக்கு மட்டுமின்றி கலாச்சாரம், விளையாட்டு போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

அடுத்த ஆண்டு இந்த செயற்கை சொர்க்கத்தின் பணிகள் தொடங்கி நான்கே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படுமாம். அதாவது இந்த சொர்க்கத்திற்கு சுற்றுலா பயணிகள் வரும் 2022ஆம் ஆண்டில் நுழையலாம். மிகப்பெரிய எண்ணெய் வள நாடாக இருந்தாலும், சுற்றுலா வருமானத்தை அதிகரிக்கவும், சுற்றுலா பயணிகளை சவுதி அரேபியாவுக்கு அதிகம் வரவழைக்கவும் இந்த திட்டம் தொடங்கப்படுவதாக சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபிய அரசின் விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் அங்கமாக இந்த மாபெரும் செயற்கை சொர்க்கம் அமைய இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்