அமெரிக்காவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா: ஒரே நாளில் 2 லட்சம் பேர் பாதிப்பு!

வெள்ளி, 4 டிசம்பர் 2020 (07:24 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 6.55 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 65,515,899பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,511,101
பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 45,363,676
பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 18,641,122ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,535,054 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 282,829 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,561,398 என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் ஒரே நாளில் 2,13,429 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும் ஒரே நாளில் 2,825 பேர் மரணம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,571,780 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 139,227 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 9,015,684 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,487,516 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 172,83175,307 3 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,725,010என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்