கொழும்புவில் 38 வயதான பெண் ஒருவர் தன்னுடைய குழந்தைகளிடம் வெளியில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு 23 வயது பையன் ஒருவனுடன் வீட்டை விட்டு ஓடிச்சென்றுள்ளார். அவருக்கு 15 வயதில் ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
இதனையடுத்து வெளியில் சென்ற தாய் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குழந்தைகள் அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் அந்த பெண்ணின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, தான் இனிமேல் வர மாட்டேன். என்னுடைய குழந்தைகளை கணவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுங்கள் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.