சாலையில் 30மீ பள்ளம் 48 மணி நேரத்தில் சரி செய்த ஜப்பான்: கற்றுக்கொள்ளுமா இந்தியா?

புதன், 16 நவம்பர் 2016 (12:41 IST)
ஜப்பானில் ஃப்யூகியோகா நகரத்தில் சாலையின் நடுவே ஏற்பட்ட பெரும்பள்ளத்தை 48 மணி நேரத்தில் சரிசெய்துள்ளது அந்நாட்டு அரசு நிர்வாகம்.


 
 
ஃப்யூகியோகா நகரத்தின் முக்கிய ரயில் நிலையத்தின் வெளிப்புறப் பகுதியில் சாலையின் நடுவே பெரும்பள்ளம் ஒன்று ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்தக் குழியால் சில மணி நேரம் அந்தப் பகுதியில் மின்சார இணைப்புகள், தொலைபேசி சேவை, நீர் சேவை, கேஸ் இணைப்புகள் போன்றவை நிறுத்தப்பட்டன. 
 
இந்த நிலையில், சாலையில் கிட்டதட்ட 30 மீட்டர் ஆழத்துக்கு ஏற்பட்ட பெரும்பள்ளத்தை ஃப்யூகியோகா நகர சாலைப் பணியாளர்கள் 48 மணி நேரத்துக்கு சரிசெய்து அந்த நகர மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்