நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலி

வெள்ளி, 4 நவம்பர் 2016 (16:43 IST)
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் மீது அமெரிக்காவின் நேட்டோ படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 

 
அண்மையில் அமெரிக்காவின் நேட்டோ படையினர், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். குறிப்பாக தலிபான் தலைவர்கள் இரண்டு பேரை குறிவைத்து இந்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இந்த தாக்குதல் ஆளில்லா விமானம் மூலம் நடந்தது. அப்போது குண்டுகள் தவறுதலாக பொதுமக்கள் வசித்த பகுதியில் விழுந்தது. அதில் 30 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெண்கள், முதியோர் மற்றும் குழந்தைகள் பலியாகினர்.
 
மேலும் 25க்கும் மெற்பட்டோர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் ராணுவக் கூட்டுப்படையுடன் நடத்தது. நேட்டோ படை அந்நாட்டு அரசுடன் நடத்திய இந்த தாக்குதலுக்கும், அதில் அப்பாவி பொதுமக்கள் இறந்ததற்கும் ஆப்கானிஸ்தான் நாடே பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்