விமான விபத்தால் நஷ்டம்? 2 ஆயிரம் பேர் பணி நீக்கம்! – போயிங் நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு!

புதன், 8 பிப்ரவரி 2023 (10:51 IST)
உலக அளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் போயிங் நிறுவனமும் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் விமானங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம் போயிங். விமான தயாரிப்பு மட்டுமின்றி ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் மற்றும் ஏவுகணை தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. விமான சேவை நிறுவனங்கள் பல போயிங் தயாரிப்பு விமானங்களை உலகம் முழுவதும் இயக்கி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா, பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் போயிங் நிறுவனத்தின் வருவாய் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்கள் முன்னதாக போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இரண்டு விபத்திற்கு உள்ளானதற்கு விமானத்தின் தவறான வடிவமைப்பே காரணம் என தெரிய வந்ததால் போயிங் சரிவை சந்தித்துள்ளது.

இதனால் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட நிறுவனத்தின் நிதி மற்றும் மனித வள பிரிவில் பணியாற்றும் 2 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த 2 ஆயிரம் பேரில் 3ல் ஒரு பங்கினர் டாடா கன்சல்டிங் சர்வீசஸை சேர்ந்தவர்கள் என்பதால் டாடா கன்சல்டிங் நிறுவனத்திலும் இந்த பணிநீக்கத்தின் தாக்கம் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்