வடகொரியா அணு ஆயுத சோதனைகளில் ஈடுப்பட்டு வந்ததால், கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. அதோடு, அமெரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகலின் எதிர்ப்பையும் சம்பாதித்தது. இதன் விளைவாக வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
ஆனால், அணு ஆயுதங்களை முழுமையாக அழித்த பின்னரே விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்க முடியாது என அமெரிக்கா தெரிவித்தது. இந்நிலையில், வடகொரியா சோகே என்னும் இடத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தை அழிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டது.