ரஷ்யாவில் உள்ள சைபீரியா பகுதியில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பேர் வேலை செய்து வந்தனர். இங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 11 பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களை மீட்க சென்ற 3 மீட்புப் படையினரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஆக்ஸிஜன் கையிருப்பு 6 மணி நேரத்துக்கு மட்டுமே இருந்த நிலையில் மேலும் 50 பேர் வரை இறந்திருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.