ரஷ்யாவின் தாக்குதலால் 14 குழந்தைகள் பலி: உக்ரைன் அறிவிப்பு

திங்கள், 28 பிப்ரவரி 2022 (10:27 IST)
ரஷ்யாவின் தாக்குதலால் 14 குழந்தைகள் உள்பட 352 பொதுமக்கள் பலியாகி உள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. 
 
உக்ரைன் நாட்டின் மீது கடந்த 5 நாட்களாக ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது என்பதும் இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 352 பேர் பலியாகி உள்ளதாகவும் இதில் 14 பேர் குழந்தைகள் என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது 
 
குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என ரஷ்யா கூறியிருந்த நிலையில் தற்போது 352 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்