13 வயது இந்திய வம்சாவளி சிறுமி உருவாக்கிய புதிய சாதனம்

வியாழன், 27 அக்டோபர் 2016 (18:35 IST)
அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயதான மனாசாமென்டு, 85 டாலர் செலவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாசனத்தை உருவாக்கியுள்ளார்.
 

 
இந்த சாதனத்திற்கு ‘அறுவடை’ என பெயரிடப்பட்டுள்ளது. இச்சாதனத்தில் அரிய மின்கலன் பொருத்தப்பட்டிருக்கிறது. இச்சாதனத்தின் சிறப்பு அம்சம் சூரியன், மழை, காற்று மற்றும் கழிவுகளிலிருந்தும் மின்சக்தி ஆற்றலை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
புதிய சாதனம், வளரும் நாடுகளின் வணிக சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனாசாமென்டு அடுத்த தலைமுறைக்கான விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளார் என அமெரிக்க அரசு பாராட்டியுள்ளது.
 
2016ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி என்ற விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்