8வது திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை: 112 வயது மூதாட்டி ஆதங்கம்..!

Siva

செவ்வாய், 16 ஜனவரி 2024 (08:17 IST)
இதுவரை ஏழு திருமணங்கள் செய்து  30 கொள்ளு பேர குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் 112 வயது மூதாட்டி ஒருவர், தனது எட்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என சோகமாக ஆதங்கத்துடன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேசியாவை சேர்ந்த 112 வயது மூதாட்டி சிதி ஹவா. இவர் ஏழு முறை திருமணம் செய்து உள்ளார் என்பதும் இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தற்போது எட்டாவது திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் ஆனால் தனக்கேற்ற மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்றும் சமீபத்தில் அவர் கூறியுள்ளார்.

ALSO READ: அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவது எப்போது? முக்கிய தகவல்..!

தன்னுடைய முன்னாள் கணவர்கள் சிலர் இறந்துவிட்டனர், சிலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டேன் என்று கூறியுள்ள அவர்  இன்னும் சுறுசுறுப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் 19 பேரக்குழந்தைகள், 30 கொள்ளு பேர குழந்தைகளுடன் இருக்கும் அவர் விரைவில் எட்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும்  தனக்கு ஏற்ற மாப்பிள்ளை விரைவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்