11 வயது சிறுவன் தலை துண்டிப்பு சிரியாவில் வெறிச்செயல்
வியாழன், 21 ஜூலை 2016 (16:00 IST)
சிரியாவில் அரசு படைகளுக்கு ஆதரவாக உளவு வேலை பார்த்ததாக சந்தேகித்து 11 வயது சிறுவன் ஒருவனை கிளர்ச்சியாளர்கள் தலையை துண்டித்து படுகொலை செய்து விட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் பெயர் அப்துல்லா இஸா எனவும் அலெப்போ நகருக்கு வடக்கே உள்ள ஹேண்டராத் என்ற இடத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படுகொலையை அவர்கள் வீடியோ படமாக எடுத்து வெளியிட்டு உலக அரங்கை பதைபதைப்பில் ஆழ்த்தி உள்ளனர். சிறுவனை படுகொலை செய்தது ஐ.எஸ். இயக்கத்தினர்தான் என மற்றொரு தகவல் கூறுகிறது.