100 அடி சுரங்கம் அமைத்து வங்கியில் துணிகர கொள்ளை

புதன், 16 ஜனவரி 2013 (15:36 IST)
FILE
ஜெர்மனியில் உள்ள பெர்லின் வங்கியின் அடியில் 100 அடி நீளத்திற்கு சுரங்க பாதை அமைத்து துணிகரமான கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெர்லின் வங்கியின் அடியில் 100 அடி நீளத்துக்கு தோண்டப்பட்ட இந்த சுரங்கம், வங்கிக்கு அருகில் தரை தளத்துக்கு கீழே உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்திலிருந்து தொடங்கி பெர்லின் வங்கியின் லாக்கர் அறையில் முடிவடைந்துள்ளது.

லாக்கர் அறையிலிருந்து பணம், நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், தடயங்களை மறைப்பதற்காக அந்த அறையை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பெர்லின் காவல் துறையின் செய்தி தொடர்பாளர் தாமஸ் நேயோடர்ப் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவம் வெகு நாட்களாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது எனவும், வங்கிக்கு அடியில் தோண்டபட்டிருக்கும் சுரங்கம் மிக நேர்த்தியாக, நிபுணத்துவ முறையில் அமைந்திருக்கிறது எனவும், கொள்ளையர்களை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்துவருவதாகவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்