மிக பெரிய அலைகள் வீசிவரும் நிலையில், கடும் வெள்ளம் மற்றும் மண் சரிவு குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
வட திசையில் முன்னேறியுள்ளதால், இனி இந்த சூறாவளி வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ''மிகவும் சக்திவாய்ந்தது'' என்று ஜப்பான் நாட்டின் வானிலை மையத்தால் முதன்முதலில் வகைப்படுத்தப்பட்ட ஜெபி சூறாவளி, 1993-ஆம் ஆண்டில் ஜப்பானின் முக்கிய தீவுகளை தாக்கி 48 பேர் இறக்க காரணமான சூறாவளிக்கு பிறகு சீற்றம் அதிகமுள்ளதாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.