அனைத்து ஆஸ்கர் விருதுகளுமே இனி நேரலைதான்... முந்தைய முடிவில் மாற்றம்

சனி, 16 பிப்ரவரி 2019 (20:15 IST)
ஆஸ்கர் விருது வழங்கும் அகடாமி ஆஃப் மோசன் பிச்சர் ஆர்ட்  சயின்ஸ் நிறுவனம் இந்த விளம்பரமும் இல்லாமல் நேரலையாகவே அனைத்து ஆஸ்கர் விருதுகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
முன்னதாக ஒவ்வொரு ஆஸ்கர் விருதுக்கும் இடையில் விளம்பரங்கள் வெளியிட முடிவு செய்திருந்தது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, லைவ் ஆக்கசன் காட்சிகள், மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் ஆகிய பிரிவில் ஆஸ்கர் விருதுகளை வழங்கும் போது வெற்றியாளர்களின் பேச்சு வருவதற்கு முன்பு கமெர்சியல் விளம்பரங்கள் வெளியிடுவது என விருது வழங்கும் அகடாமி நிறுவனம் தீர்மானித்து இருந்தது. 
 
இதற்கு கடும் எதிர்ப்பு மற்றும் ஆட்சேபனைகள் எழுந்ததால் அகடாமி தனது முடிவினை மாற்றிக்கொண்டுள்ளது. இனி 2020ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், எடிட்டிங் செய்யாமல் வழக்கம் போல், நேரலை செய்யப்படும் என அகடாமி அவார்டஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்