உடலுக்கு ஆரோக்கியம் தரும் தூதுவளை சூப் செய்ய !!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (18:54 IST)
தேவையான பொருட்கள்:

தூதுவளை இலைகள் - ஒரு கைப்பிடி
மிளகு -1 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல் பொடியாக
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
தனியாத்தூள் -1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை -1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கான்ப்ளார் - அரை தேக்கரண்டி



செய்முறை:

ஒரு கடாயில் மிளகு, சீரகம் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும். வெண்ணெய் அல்லது எண்ணெய் ஒரு தேக்கரண்டி அளவு ஊற்றி அதில் பூண்டு, வெங்காயம் பொடியாக சேர்த்து வதக்கி பிறகு தூதுவளையை சேர்த்து வதக்கி துண்டு துண்டாக அல்லது (பேஸ்ட் போல செய்தும் சேர்க்கலாம்) மிளகு, சீரகம் பொடிகளை சேர்த்து தனியாத்தூள், உப்பு போடவும்.

பிறகு தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கொதிக்கவிடவேண்டும். நன்கு கொதித்து வந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் கான்ப்ளார் கரைத்து ஊற்றி இறக்கி மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும். ஆரோக்கியமான தூதுவளை சூப் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்