வீட்டில் சுலபமான முறையில் சாம்பார் பொடி செய்ய !!

தேவையான பொருள்கள்:
 
காய்ந்த சிவப்பு மிளகாய் - 1 கிலோ
தனியா - 1 கிலோ
சீரகம் - 200 கிராம்
வெந்தயம் - 100 கிராம்
மிளகு - 50 கிராம்
பெருங்காயம் - 50 கிராம்
மஞ்சள் தூள் - 50 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்

செய்முறை:
 
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து வெயிலில் காயவையுங்கள். அதன்பிறகு இந்த அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக கடாயில் போட்டு  (எண்ணெய் விடாமல்) வறுக்கவேண்டும். வறுக்கும் பொழுது கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
கருகினால் அதன் சுவை மாறிவிடும். பொன்னிறமாக வறுத்த பின்னர் அதை நன்றாக ஆறவிட்டு அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். நன்றாக ஆறிய பின்னர் அரவை மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து வாங்கி கொள்ளுங்கள்.
 
அரைத்த சாம்பார் பொடியை நன்றாக ஆறவிட்டு காற்று புகாத புட்டிகளில் அடைத்து வைத்து பயன்படுத்துங்கள். 6 மாதம் வரை இதை பயன்படுத்தலாம். வீட்டில் செய்வதனால் நல்ல சுவையுடன் தரமாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்