இந்த முறையில் செய்துபாருங்கள் முட்டை மசாலா !!

தேவையான பொருட்கள்:
 
முட்டை - 2
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
கிராம்பு - 2
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
புளிக்கரைசல் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் முட்டையை வேகவைத்து , முட்டையின் ஓட்டை நீக்கி, இரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதன்பின் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி  கொள்ளவும். 
 
இது தயார் ஆனதும் குழம்பு செய்ய பயன்படுத்தும் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய  வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 
வெங்காயம் வதங்கிதும் காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் போட்டு சில நிமிடங்கள் நன்கு கிளறி விடவும். பின்னர் அதில் புளிக்கரைசல்,  சோயா சாஸ், உப்பு போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
 
பின்னர் ஆனதும் இரண்டாக நறுக்கிய முட்டையை இந்த மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி கொள்ளவேண்டும். இப்போது சுவையான சில்லி முட்டை மசாலா தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்