ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி சட்னி செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
கொத்தமல்லி - 1 பெரிய கட்டு
தக்காளி - 4
பூண்டு - 8 பல்
இஞ்சி - 1 அங்குல துண்டு
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை

செய்முறை:
 
தக்காளி, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாயோடு சேர்த்து வதக்கவும்.
 
தக்காளியில் நீர் வற்றியதும் பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். உப்பு சேர்த்து பதமாக சட்டினி போல அரைக்கவும். 
 
நல்லெண்ணெய்யில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து சேர்க்கலாம். அவ்வளவுதான் கொத்தமல்லி சட்னி தயார். இந்த சட்டினி இட்லி, தோசையோடு  சாப்பிட சுவையாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்