முதலில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாயை போன்றவையை தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். ஒரு பக்கம் வுட்டன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு ஒரு கடாயை எடுத்து அதில் வெண்ணெய், ஓமம், கடலை மாவு ஆகியவை சேர்த்து கிளறி கொள்ளவும்.
இந்த கலவையில் நறுக்கி வைத்த பன்னீர் துண்டுகள், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும். அடுத்து ஸ்க்யூவரில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக சொருகி டிக்காக்களை ரெடி செய்து கொள்ளவும்.