வாழைப்பூ குழம்பு செய்ய !!

தேவையான பொருட்கள்: 
 
வெங்காயம் - 2
தக்காளி - 3
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தேங்காய்ப்பால் - முக்கால் கப்
புளி - எலுமிச்சை அளவு
தண்ணீர் - ஒன்றரை கப்
நடுத்தர அளவு வாழைப்பூ - ஒரு கப்
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மோர் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: 
 
வாழைப்பூ இதழ்களை ஒன்றிரண்டாக நறுக்கி மோரில் போட்டுவைக்கவும். புளியைத் தண்ணீரில் கரைத்துவைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக  நறுக்கிவைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிவைக்கவும். 
 
எண்ணெய்யைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின்னர், மோரில்  உள்ள வாழைப்பூவை ஒட்டப்பிழிந்து வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். 
 
தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். பிறகு புளித்தண்ணீரை வடிகட்டி சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். கலவை சிறிது கெட்டியானவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து, ஒரு கொதிவந்தவுடன் இறக்கிவிடவும். சுவையான வாழைப்பூ குழம்பு தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்