செய்முறை:
அரிசி மாவை வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதனுடன் உளுந்து மாவு, கடலை பருப்பு, உப்பு, எள்ளு, வெண்ணை, பெருங்காயம், போட்டு நன்றாக கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும். மிகவும் தளர பிசைய வேண்டாம்.
ஒரு துணியில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும். உருண்டைகள் உலர்ந்தவுடன், அடுப்பில் எண்ணெய்யை காய வைத்து எண்ணெய் கொள்ளும் அளவிற்கு சீடையை போட்டு நிதானமான தீயில் வேக வைத்து எடுக்கவும். வெந்த சீடை மிதந்து மேல வரும்.
குறிப்பு:
வெடிக்காமல் சீடை பொரிப்பது எப்படி என்றால்? அரிசி மாவு வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது அவசியம். கடையில் கிடைக்கும் அரிசி மாவில் கண்ணுக்கு தெரியாத சிறிய கல் இருந்தாலும், சீடை வெடித்து எண்ணெய் மேலே தெரிக்கும்.
சீடையை உருட்டும்போது அதிகம் அழுத்தாமல், கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து லேசாக உருட்டவும். அப்படி உருட்டினால் விரிசல் விடாது. இதனால் பொரிக்கும்போது வெடிக்கவும் வெடிக்காது. இவை அனைத்தையும் மீறி உங்களுக்கு பயமாக இருந்தால், உருட்டிய மாவு எண்ணெய் உள்ளே போட்டு, மேலே மூடியை மூடி வைத்து பொரிக்கவும்.