முளைகட்டிய நவதானியம் - ஒரு கப்
முள்ளங்கி கீரை, கோஸ், பாலக்கீரை - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முளைகட்டிய நவதானியத்தை கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக்கொள்ளவும். மைதா மாவு, நவதானிய மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு பதத்தில் பிசையவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக நறுக்கிய கீரைகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த நவதானிய விழுது, மசித்த உருளை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு இறக்கி, ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக்கவும்.