தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும். தும்பைச் சாற்றையும், பழச்சாற்றையும் சம அளவு எடுத்துக் கலந்து கொடுத்து வர ஆனந்த வாயு தீரும்.
கழுதைத் தும்பை வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச அரையாப்பு குணமாகும். தும்பைச் சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய் பயன்படுத்தி உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.