எளிதான முறையில் இயற்கை ப்ளீச்சிங் முறைகள் !!

ப்ளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும். 

1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து,  வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
 
1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில்  கழுவலாம்.
 
2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காயவைத்து, பின் நீரில் கழுவ  வேண்டும்.
 
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல்  பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்