* வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். வயிற்றுக்கு கட்டி, உடல் வீக்கம், சீத பேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற அனைத்தும் குணமாகும்.
* வெந்தயத்தை ஊறவைத்து அது முளை கட்டவும், அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீட்ரூட் துருவல், தக்காளிப் பழத்துண்டுகள், உப்பு, மிளகுப்பொடி, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவும். சுவையான சத்துள்ள குளிர்ச்சியான சாலட்டும் கூட.
* வெந்தயம், ஓரிதழ் தாமரை, விடத்தலை வேர், சுக்கு, வால் மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர உடல் அரிப்பு நீங்கும்.