செய்முறை :
கொத்தமல்லி, முந்திரி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும்.
மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தோசை வார்க்கும் முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.