விவசாய நெருக்கடி தீர நிதி - இடதுசாரிகள்!

சனி, 23 பிப்ரவரி 2008 (16:58 IST)
webdunia photoWD
விவசாய துறை சந்தித்து வரும் நெருக்கடியை தீர்க்க போதுமான நிதியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்று இடது சாரி கட்சிகள் கோரியுள்ளன.

மத்தியில் ஆட்சியில் உள்ள மன்மோகன் சிங் அரசு வரும் பட்ஜெட்டில் விவசாயிகளின் நெருக்கடி தீர போதுமான நிதியை ஒதுக்க வேணடும். விலையாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். பணக்காரர்களுக்கு வரியை உயர்த்த வேண்டும் எனறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக் ஆகிய மூன்று இடதுசார் கட்சிகளும் கூறியுள்ளன.

குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி, நல்வாழ்வு, கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழைகளுக்கான வேலை வாய்ப்பு உருவாக்குகுதல் ஆகியவை திட்டங்களுக்கு பட்ஜெட்டில் குறைந்த பட்சம் 60 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும்.

சமீப காலத்தில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் நெருக்கடி தீர பட்ஜெட்டில் தேவையான அறிவிப்பு வெளியாகும் என்று நம்புவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.ி.பரதன், சுதாகர் ரெட்டி ஆகியோர் தெரிவித்தனர்.

webdunia photoWD
மேலும் அவர்கள் கூறுகையில், விவசாயிகளின் கடன் நிவாரண கமிஷன் அமைக்கப்பட வேண்டும். நாடுமுழுவதும் உள்ள சிறு, நடுத்தர விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும்.

தேசிய விவசாய கமிஷன் தெரிவித்துள்ளது போல், விவசாயிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டியை 4 விழுக்காடாக குறைக்க வேண்டும்.

மானிய விலையில் உரம் வழங்குதுடன், அதிக மகசூல் தரக்கூடிய தரமான விதை, தாராளமான கடன், விளைபொருட்களை சந்தைபடுத்தும் வசதி,நீர்ப்பாசனம், நவீன விவசாய முறை ஆகியவைகளே விவசாயிகளின் நெருக்கடி தீர உதவும்.

தேசிய சொத்து சிலரிடம் குவிவதை தடுக்க பெரும் பணக்காரர்களுக்கு அதிக அளவு வரி விதிக்க வேண்டும். பல பெரிய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் வரி செலுத்தாமல் இருக்க, தங்களுடைய தலைமை அலுவலகம் மொரிசீயஸ் மற்றும் இதர நாடுகளில் இருப்பதாக காட்டுகின்றனர். இந்த வரி ஏய்ப்பை தடுக்க விதி முறைகள் திருத்தப்பட வேண்டும்.

சர்வதேச மனிதவள மேம்பாட்டு அறிக்கையின் படி, இந்தியா 126 வது இடத்தில் உள்ளது. லட்சக்காணக்கான குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி மறுக்கப்படுகிறது. நலவாழ்வுக்காக மொத்த பட்ஜெட்டில் 1 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்று சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

நாடாளுமன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் குருதாஸ் குப்தை கூறுகையில், வரவிருக்கும் பட்ஜெட்டில் எங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இல்லை. அரசு எங்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல் என்றுமே பட்ஜெட் வெளியிடாது. ஐக்கிய முன்னணி அரசு சமர்பித்துள்ள எல்லா பட்ஜெட்டுகளுமே, சாமானிய மக்களை ஏமாற்றியே உள்ளன. ஐக்கிய முன்னணி தேர்தலை எதிர் கொள்ள வேண்டியதுள்ளது. இதனால் இது தேர்தல் பட்ஜெட்டாக இருக்கும். இதற்கான அறிவிப்புக்கள் மட்டுமே இருக்கும் என்று கூறினார்.

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா கூறுகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக பகுதிளில் அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் செஸ் வரியை கொண்டு தனியாக பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயிப்பு நிதியை உருவாக்க வேண்டும். மத்திய அரசு உற்பத்தி பொருட்கள் மீது விதிக்கம் மேம்பாட்டு வரியை நீக்க வேண்டும். இதற்கு பதிலாக குறிப்பிட்ட விழுக்காடு நிலையான வரியை விதிக்க வேண்டும். இதனால் விலை உயராமல் தடுக்கப்படும் என்று கூறினார்.

webdunia photoWD
செல்வந்தர்களுக்கு அதிக அளவு வரி விதிப்பதுடன், பட்ஜெட்டில் நீண்ட கால முதலீட்டின் மீதான வரி விதிப்பதை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசு பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்களுக்கும் ரியல் எஸ்டேட் ஏஜென்டுகளுக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பல்வேறு சலுகைகளை அளிக்கின்றது என்று இடது சாரி கட்சி தலைவர்கள் கூறினார்கள்.