கேரளாவுக்கு மக்களை வரச் சொல்லும் விராட் கோலி...

புதன், 31 அக்டோபர் 2018 (19:30 IST)
நம் இந்திய திரு நாட்டின் மிக முக்கியமான கொஞ்சும் மலையாள  மொழி பேசும் நாடு கேரளாவாகும்.  இது கடவுளின் சொந்த தேசம் என அழைக்கப்படுகிறது.
இந்த தேசத்துக்கு மக்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என இந்திய கிரிகெட் அணி கேப்டன் விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 5ஆம் மற்றும் இறுதி ஒருநாள் கிரிகெட் போட்டி நாளை கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் கேரளாவிற்கு சென்று அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர்.
 
அந்த  ஹோட்டலின் மூலமாக ஒரு குறிப்பு எழுதி வெளியிட்டுள்ளார் விராட் கோலி.
 
அவர் எழுதியுள்ளதாவது:
 
நான் எனது அனுபவித்ததிலிருந்து இதைச் சொல்லுகிறேன்.கடவுளின் தேசம் அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று.நான் இங்கே வந்தால் எனகுண்டாகும் இன்பத்துக்கு குறைவில்லை.அதனால் இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் அதில் எழுதியுள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெருமழை பெய்து கடும் வெள்ளக்காடானது.மாநிலம் முழுவதும் மக்கள் உண்ண உணவின்றி,தங்க இடமின்றித் தவித்தனர்.அதனால் தேசமெங்கிலும் இருந்து உதவிகள் கேரளாவிற்கு கிடைத்தது.
 
இப்போது மறுபடி புனரமைப்பும், புத்துணர்வும் பெற்றுள்ள கேரளாவிற்கு மக்கள் வர வேண்டுமெனெ கோலி எழுதியுள்ளதை கேரள மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்