மீண்டும் முதல்வர் ஆவாரா சித்தராமையை? தேர்தல் சர்வே...

வியாழன், 26 ஏப்ரல் 2018 (12:57 IST)
கர்நாடகாவில் தேர்தல் வரும் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்னர் எப்போதும் போல கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், சித்தராமையா மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
கர்நாடகாவில் ஆளும் கட்சியாக காங்கிரஸும், எதிர்கட்சியாக பாஜகவும், மூன்றாவது பெரிய கட்சியாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் உள்ளது. கருத்து கணிப்பின் படி, கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையக்கூடும் என செய்திகள் வெளியாகினறன.
 
இதனால், கர்நாடவில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பதை மூன்றாவது பெரிய கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் முடிவு செய்ய கூடும் என தெரிகிறது. மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் ஆதரவு பாஜகவுக்கா? அல்லது காங்கிரஸுக்கா? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. 
 
கொள்கை ரீதியாக தேவகவுடாவிற்கு பாஜகவைவிட காங்கிரஸே நண்பன். ஆனால், காங்கிரஸ் கட்சி சித்தராமையாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம்  கட்சியிலிருந்து தேவகவுடாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸ் சென்றவர் சித்தராமையா. 
 
இருவருக்கும் ஜென்ம பகை உள்ளதால், சித்தராமையா முதல்வராக்க கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸுக்கு மதசார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளிக்க கூடும் என தெரிகிறது. இதற்கு மற்ற காங்கிரஸ் மூத்த உறுபினர்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்