கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 12 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில், இன்று அதிரடி ரைட் நடத்தப்பட்டுள்ளது.
30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆராய்ந்தனர். அதில் கணக்கில் வராத ரூ.55 லட்சம் ரொக்கப்பணமும், ரூ.16 கோடி மதிப்பிலான ஆவணங்களும் சிக்கியதாக தெரிகிறது.
இது குறித்து, சித்தராமையா கூறியதாவது, மோடி தலைமையிலான மத்திய அரசு வருமான வரித்துறையை தவறாகப் பயன்படுத்துகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸாரின் வீடுகளை குறிவைத்து வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.