உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கண்ணே கலைமானே’. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். வசுந்தரா கஷ்யப், வடிவுக்கரசி, ஷாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மதுரை வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக இருந்தது. அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், இந்துஜா இருவரும் ஒப்பந்தமானார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை, உதயநிதியே தயாரிப்பதாக இருந்தது.
கடந்த வாரம் ஷூட்டிங் போவதாக இருந்த இந்தப் படம், திடீரென நிறுத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது. தற்போதைய நிலையில், உதயநிதிக்குப் பதிலாக இன்னொருவர் படத்தைத் தயாரிக்கலாம் என்கிறார்கள். அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படுமாம்.