ரூ.20 திட்டம் திருப்பரங்குன்றத்தில் செல்லாது: தினகரனுக்கு அமைச்சர் சவால்

திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (08:17 IST)
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏக்களான ஏ.கே.போஸ் மற்றும் கருணாநிதி காலமானதை அடுத்து இந்த இரு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த இரு தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் என்றும், இரண்டு தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார்
 
இந்த நிலையில் அமைச்சர் உதயகுமார் பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறுகையில், 'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரனின் ரூ.20 திட்டம் செல்லாது என்றும், அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்போம் என்றும் இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம் என்றும் கூறினார். ஏற்கனவே ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன் ரூ.20 டோக்கன் கொடுத்ததாக அந்த பகுதி மக்கள் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை அதிமுக, திமுக மற்றும் தினகரன் கட்சிகள் ஒரு மானப்பிரச்சனையாக எடுத்துள்ளது. ரஜினி, கமல் என்ன செய்ய போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்