தலைமைசெயலகத்தில் நேற்று எதிர்கட்சி தலைவர் மு.கஸ்டாலின், திமுக எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க சென்ற போது, அதை முதல்வர் தவிர்த்ததால்தான் பிரச்சனையே உருவானது என செய்திகள் வெளிவந்துள்ளது.
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஸ்டாலினும், திமுக எம்.எல்.ஏக்களும் சென்ற போது, வாய்ப்பு வழங்கப்படாததால் அவரின் அறைக்கு முன்பே ஸ்டாலின், எம்.எல்.ஏக்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். அதன் பின் கீழறங்கி சாலை மறியலில் ஈடுபட்டார். அதனால், ஸ்டாலினும், மற்ற எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, ஏராளமான திமுக எம்.எல்.ஏக்களோடு, ஸ்டாலின் மேலேறி வருவதை அறிந்த முதல்வர், அவர்கள சந்திப்பதை தவிர்ப்பதற்காக தனது அறையை மூட சொன்னாராம். இதனால், ஸ்டாலின் வெளியே காத்திருக்க வேண்டியதாயிற்று. உள்ளே செல்லவும் காவலர்கள் அனுமதிக்கவில்லை.