மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், தற்போது மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அரசியல் தொடக்கம் நல்லபடியாக அமைந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கவே உங்களை அழைத்தேன் என அவர் தெரிவித்தார். மேலும், அதிமுக நடத்தும் அனைத்து கட்சிக்கு கூட்டத்திற்கு ஒருவேளை அழைப்பு விடுத்தால் அதில் கலந்து கொள்வதற்காக சென்னை செல்கிறோம். அழைக்காவிட்டாலும் எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது எனக் கூறினார்.