கலைந்து செல்ல தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

ஞாயிறு, 29 ஜூலை 2018 (23:54 IST)
காவிரி மருத்துவமனை கருணாநிதி உடல்நிலை தொடர்பாக மருத்துவ அறிக்கை வெளியானதை தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 
அதில்,
 
எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது கருணாநிதியின் உடல் சீராகி உள்ளது.
 
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். காவேரி மருத்துவமனையில் மருத்துவ அறிக்கையில் கூறியது போல் எதிர்பாராத விதமாக சற்று பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராகி உள்ளது.
 
மருத்துவர்கள் குழு கருணாநிதி அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளது. காவேரி மருத்துவமனையில் குவிந்திருக்கும் திமுக தொண்டர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்