முத்தரப்பு டி20 போட்டி : இந்தியா- இலங்கை இன்று பலப்பரிட்சை

செவ்வாய், 6 மார்ச் 2018 (11:35 IST)
இலங்கை கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தியா- இலங்கை மோதும் முதல் நிதாஸ் டிராபி முத்தரப்பு டி20 போட்டி இன்று  நடைபெறுகிறது.

 
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் இன்று துவங்குகிறது.
 
இந்த டி20 தொடரில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் 3 அணிகளும் தலா 2 முறை நேருக்கு நேர் மோதவுள்ளது.அதில் 6 போட்டிகளில் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி பைனலில் விளையாட உள்ளது.
 
இந்த நிதாஸ் டிராபி டி20 தொடர் இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு நடைபெறுகிறது. மேலும், நடைபெறும் அனைத்து போட்டிகளும் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகின்றன. 
 
நிதாஸ் டிராபி முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா- இலங்கை மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்