தமிழகத்தை உலுக்கிய அபிராமியின் கணவருக்கு ஆறுதல் தெரிவித்த ரஜினிகாந்த்

வியாழன், 6 செப்டம்பர் 2018 (11:49 IST)
சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக அபிராமி என்ற பெண், தனது 2 குழந்தைகளை பாலில் விஷம் வைத்து கொன்று விட்டார். பின்னர் தன் கள்ளக் காதலனை தேடி நாகர்கோவில் சென்றார். 
இதை கண்டுபிடித்த போலீசார், அபிராமியை கைது செய்து தற்போது விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
 
கள்ளக்காதலுக்காக தான் பெற்ற பிள்ளைகளை, தன் மனைவியே கொன்ற சம்பவம், அவரது கணவர் விஜய்க்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அபிராமியின் கணவர் விஜய்யை நடிகர் ரஜினிகாந்த் நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்