கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்தார். இதனால், காங்கிரஸ் திமுக கூட்டணி நிலைக்காது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதனால், இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க பல அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். எனவே, அதன் படி தமிழகத்திற்கு வந்து ஆதரவு கோரியதாக கூறப்பட்டு வரும் நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது, சந்திரசேகரராவ், மம்தா பானர்ஜியுடன் கூட்டணி சேருவதால் திமுகவுக்கு ஒரு பயனும் இல்லை. நாட்டில் மூன்றாவது அல்லது நான்காவது அணி ஆட்சியே அமைக்க முடியாது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியால்தான் பாஜக அரசை அகற்ற முடியும். திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறவில்லை. மம்தா, சந்திரசேகர ராவ் கட்சிக்கு தமிழகத்தில் ஆட்களே கிடையாது.