ஸ்டாலின் மைத்துனர் மருத்துவமனையில் அனுமதி: அதிமுக அமைச்சர் காரணமா?

திங்கள், 30 ஏப்ரல் 2018 (22:02 IST)
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மைத்துனர் ராஜமூர்த்தி என்பவர் இன்று மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தமே தனது உடல்நலக்குறைவுக்கு காரணம் என்றும் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
நாகை மாவட்டம் ஆக்கூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ள ராஜமூர்த்தி திடீரென இன்று நெஞ்சுவலி காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
அமைச்சர் ஓ.எஸ். மணியன் மட்டுமின்றி பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் அவர்களும் அரசியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாகவும், இதன் காரணமாக தான் மிகுந்த மன அழுத்தம் அடைந்திருப்பதாகவும் ராஜமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ராஜமூர்த்தியின் குற்றச்சாட்டுக்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் பூம்புகார் எம்.எல்.எ பவுன்ராஜ் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்