சென்னை சென்டிரலில் இருந்து இந்த மாதமும், அடுத்த மாதமும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் இரவு 9.50 மணிக்கு மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அக்டேபார் மாதம் 11, 18, 25-ந் தேதிகளிலும், நவம்பர் மாதம் 1, 8-ந் தேதிகளிலும் உள்ள திங்கட்கிழமைகளில் இரவு 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயிலானது (வ.எண்.0653) மறுநாள் காலை 8.50 மணிக்கு மதுரையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், இந்த மாதம் 12, 19, 26-ந் தேதிகளிலும், அடுத்த மாதம் 2, 9-ந் தேதிகளிலும் உள்ள செவ்வாய்கிழமைகளில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயிலானது (வ.எண்.0654) மறுநாள் காலை 8.10 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.
இந்த ரெயில் சென்டிரலில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று முதல் (09.10.10) தொடங்குகிறது என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது