சுற்றுலா பொருட்காட்சி டிசம்பர் 10-ந் தேதி தொடக்கம்

புதன், 27 அக்டோபர் 2010 (12:05 IST)
சென்னையில் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் நட‌த்த‌ப்படு‌ம் சுற்றுலா பொருட்காட்சி வரு‌ம் டிசம்பர் மாத‌ம் 10-ந் தேதி துவ‌ங்‌கி தொட‌ர்‌ந்து 75 நா‌ட்க‌ள் நட‌த்த‌ப்பட உ‌ள்ளது. இதற்காக, தீவுத்திடலில் அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக ஆ‌ங்‌கில‌ப் பு‌த்தா‌ண்டு அ‌ன்று துவ‌ங்கு‌ம் பொரு‌ட்கா‌ட்‌சி, த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டு (ஏ‌ப்ர‌ல் 14) வரை நட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ந்தது.

ஆனா‌ல் கட‌ந்த ஆ‌ண்டு முத‌ல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு டிச‌ம்ப‌ர் மாத‌ம் முதலே பொரு‌ட்கா‌ட்‌சியை துவ‌க்‌கியது சு‌ற்றுலா‌த் துறை. இ‌ந்த ஆ‌ண்டு‌ம் அதுபோலவே டிச‌ம்ப‌ர் 10ஆ‌ம் தே‌தியே பொரு‌ட்கா‌ட்‌சியை‌த் துவ‌க்க ஏ‌ற்பாடுக‌ள் நடைபெ‌ற்று வரு‌கிறது.

மத்திய - மாநில அரசு துறைகளின் சாதனைகளை விளக்கும் அரங்குகள், தனியார் அரங்குகள், விற்பனை வளாகங்கள், விளையாட்டு திடல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என பல்வேறு தரப்பு மக்களையும் கவரும் வகையில் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கப்ப‌ட்டு வரு‌கிறது.

பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை, 25 சதவீத பணிகள் முடிந்துள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாத இறுதிக்குள் 90 சதவீத பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொருட்காட்சியை 75 நாட்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 10-ந் தேதி தொடங்கும் இந்த சுற்றுலா பொருட்காட்சியை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

சுற்றுலா பொருட்காட்சியை பார்க்க வருபவர்களுக்கு, கடந்த ஆண்டு பெரியவர்களுக்கு ரூ.10 என்றும், சிறியவர்களுக்கு ரூ.7 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு கட்டணம் உயர்கிறது. அதாவது, பெரியவர்களுக்கு ரூ.15 என்றும், சிறியவர்களுக்கு ரூ.10 என்றும் கட்டணம் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்